எம்.ஏ. தாஜகான்
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை கூப்பனுக்கான சரியான சீருடைகள் கடைகளில் வழங்கப்படவில்லையென சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி இன்று பாடசாலை மாணவனின் பெற்றோர் ஒருவரினால் கருத்து தெரிவித்த பொழுது:
பொத்துவிலில் பாடசாலை மாணவர்களின் கூப்பனை சில கடைகளில் வழங்கி சீருடை கொள்வனவு செய்ய முயற்சித்தும் கடைக்காரர்கள் சீருடைக்கு பதிலாக டீ சேர்ட் வழங்கி வருவதாகவும், சில பெற்றோர்கள் கூப்பனைக் கடைகளில் கொடுத்து பெறுமதியினை விட குறைவான பணத்தை முற்பணமாக பெற்றுச்செல்வதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் கூப்பனுக்காக கடைகளில் வழங்கப்படுகின்ற சீருடைத்துணிகள் குறைவான அளவுடையதாகவிருப்பதனால் பிள்ளைகளுக்கு போதாமையுள்ளது. எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் சில பெற்றோர்கள் சீருடைக்கூப்பனை கடைகளிலும், தனியார் நபர்களுக்கும் கொடுத்துவிட்டு சிறுதொகைப்பணங்களைப் பெற்றுக்கொண்டு தான் செலவு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.