வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் இலங்கை 91 ஆவது இடம் !

images

போர்ப்ஸ் சஞ்சிகையினால் வெளியிடப்பட்டுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் சீனா 94 ஆவது இடத்தனையும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன முறையே 97,103 ஆவது இடங்களில் காணப்படுகின்றன.

மேலும் இந்த பட்டியலில் மலேசியா 34 ஆவது இடத்தினையும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியன 22,23 ஆவது இடங்களையும் முறையே பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களையும் பெற்றுள்ள நாடுகளின் விபரம் வருமாறு
1- டென்மார்க்
2 – நியூசிலாந்து
3 – நோர்வே
4 -அயர்லாந்து
5 – சுவீடன்
6 – பின்லாந்து
7 – கனடா
8 – சிங்கப்பூர்
9 – நெதர்லாந்து
10 – இங்கிலாந்து