இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் உலகத்தின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவருமான குமார் சங்கக்கார தனது முதலாவது Big Bash லீக் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு பின்னர் பிக் பாஷ் லீக்கில் பங்குபற்றும் முகமாக நேற்றைய தினம்(16) அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தார் குமார் சங்கக்கார. இம்முறை ஹொபார்ட் அணிக்ககாவே சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிற்காக விளையாடும் போது பங்குபற்றிய போட்டிகளை காட்டிலும் தற்போது அதிகளவான போட்டிகளில் தான் பங்குபற்றுவதாக சங்கக்கார அங்கு இடம்பெற்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அதிகப்படியான வாய்ப்புக்கள் வந்து குவிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் ஹொபார்ட் அணிக்குள் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின் போது சங்கா 4 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தார்.
12,400 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்துள்ள சங்காவுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டரன் சமியும் ஹொபார்ட் அணி சார்பில் களமிறங்கவுள்ளார்.
ஹொபார்ட் அணி எதிர்வரும் ஞாயிறன்று தனது முதலாவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.