இளவரசியை வரவேற்க பிங்க் நிறத்தினால் தன்னை அலங்கரித்துக்கொண்ட பிரிட்டன் !

kate-middleton-prince-william-baby-girl-photos-pp

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டனுக்கு கிடைத்திருக்கும் குட்டி இளவரசியை இங்கிலாந்தே கொண்டாடி வருகிறது. 

குட்டி இளவரசியின் வருகை முதன் முதலாக லண்டனின் புகழ்பெற்ற BT Tower-ல் உள்ள பிரம்மாண்ட LED திரையில் பெண் குழந்தை பிறந்திருக்கு!! (It’s a girl!) என்று பிங்க் நிறத்தில் ஒளிரும் விளக்குகள் சுற்றி சுழந்து அறிவித்தது.

அடுத்த படியாக பிரசித்தி பெற்ற லண்டன் capital Tower பாலம் பிங்க் நிற ஒளிக்கற்றைகளால் நிரம்பியது. இதைப் பார்த்த லண்டன் வாசிகலும் சுற்றுலாப் பயணிகலும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். 

குட்டி இளவரசி பிறந்த நல்ல செய்தி கிடைத்ததும் வெஸ்ட் மினிஸ்டர் கவுன்சில் இன்றிரவு இளவரசியின் வருகையை கொண்டாடும் வகையில் நகரமே பிங் நிறமாய் ஒளிரும் என்று அறிவித்தது. மெர்சண்ட் சதுக்கத்தில் உள்ள அலங்கார நீரூற்று உட்பட இங்கிலாந்தே பிங்க் நிறமாக மாறி விட்டதோ என்று வியக்கும் வகையில் குட்டி இளவரசியின் வருகை கொண்டாடப்பட்டது.

britain-royal-baby landmarks-1--z landmarks-3--z