மாலபே தனியார் கல்லூரி மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சி அரச நிறுவனத்தில் வழங்கப்படுமாயின், குறித்த நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் அச் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறு குறித்த கல்லூரியை மக்கள் மயப்படுத்தி, அரசாங்கத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் மாணவர்களை இணைத்துக் கொள்ளவும் அவர்களது தகுதி குறித்த ஆராயவும் வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளார்.
ஏழு வருட காலப் பகுதியில் குறைபாடுகளுடன் கூடிய கல்வியே இவர்கள் பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் நேற்று உயர் நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும், இது தொடர்பில், எதிர்வரும் 18ம் திகதிக்குள் கிளை சங்கங்களுடன் பேசி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக நலிந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.