எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஐ. தே. கட்சி மற்றும் ம. வி. முன்னணி ஆகியவற்றுக்கிடையில் முருகல் நிலை !

575849166Untitled-1

ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கிடையில் முருகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உபாலி சமரவீர, அண்மையில் மாகாண அமைச்சராக பொறுப்பேற்றார். 

இதன்படி மாகாண சபையில் எதிர்க்கட்சியாக செயற்பட ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிமை இல்லை எனக் கூறிய, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, அவை தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சமந்த வித்தியாரத்னவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். 

எதுஎவ்வாறு இருப்பினும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் கசீம் அனுப்பி வைத்த கடிதத்தை சபையில் சமர்ப்பித்த அவைத் தலைவர், அதில் குறித்த பதவிக்கு ஆர்.எம்.ஜயசிங்க (ஐக்கிய தேசியக் கட்சி) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

இதன்போது சபையில் குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் இந்தப் பிரச்சினை தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர்களால் பேசித் தீர்க்கப்பட வேண்டும் என, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.