திவிநெகும பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிய நிகழ்வு!

 

பி.எம்.எம்.காதர்

கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதமுனை,நற்;பிட்டிமுனை கிராமங்களில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிய நிகழ்வு இன்று(15-12-2015)மருதமுனை திவிநெகும வங்கியில் நடைபெற்றது.

1-PMMA CADER-15-12-2015_Fotor

 

மருதமுனை திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.

3-PMMA CADER-15-12-2015_Fotor

அவர் இங்கு உரையாற்றுகையில் :-

திவிநெகும உதவி பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கோடும்,சுயதொழிலை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையிலுமே இன்று இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

 

எனவே திவிநெகும பயனாளிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்த்திராமல் பொறுப்புணர்ச்சியுடன்,அக்கறையுடனும் செயற்பட்டு உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வதோடு வறுமை நிலையில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றார்.

 

திவிநெகும திணைக்களத்தின் மானியத்துடனும்,பயனாளிகளின் பங்களிப்புடனும் மருதமுனை நற்பிட்டிமுனை கிராம திவிநெகும பயனாளிகள் 19பது பேருக்கு இந்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் திவிநெகும உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.