ஊடகவியலாளரும் ஆசிரியருமான மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு ‘சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது’!

பி.எம்.எம்.ஏ.காதர்

 

ஊடகவியலாளரும் ஆசிரியரும் இலக்கிய மதிப்பீட்டாளருமான மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு ‘சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1-PMMA CADER-16-12-2015_Fotor

 

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் கனடா படைப்பாளிகள் உலகமும், தடாகம் கலை இலக்கிய வட்டமும் ஒன்றிணைந்து எழுத்தாளர் கலை மகள் ஹிதாயா றிஸ்வியின் ஒருங்கிணைப்பில் திருகோணமலை சன்சைன் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(15.12.2015) இடம்பெற்ற பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு மற்றும் துறைசார் விருது வழங்கும் நிகழ்விலேயே இவருக்கான விருது வழங்கப்பட்டது.

 

இலங்கையில் வெளிவரும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடகவியலாளராக பணியாற்றிவரும் ஜெஸ்மி மூஸா அலிஸ் ஊடக வலையமைப்பின் பிரதம நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்
தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் விசேட துறையில் விசேட பட்டம் பெற்று முதுகலை மாணியைப் பூர்த்தி செய்துள்ளதுடன் ‘ஈழத்துச் சிறுகதைகளில் தனியாள் ஆளுமை’ தொடர்பில் முதுகலை தத்துவ மாணிக்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார்

 

இலக்கியத்தில் கல்முனைப் பிரதேச தமிழ்-முஸ்லிம் உறவுஇகல்முனைப் பிரதேச போர்ச் சூழல் கவிதைகள்-இஸ்லாமிய இலக்கியப் பண்புகளின் கட்டுடைப்பு ஆகிய தலைப்புக்களில் இலங்கையில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாடுகளை கட்டுரைகளைச் சமர்ப்பித்து பாராட்டுக்களைப் பெற்றவர்

 

 

நாகம்மாள் ஒரு பார்வை-திருக்குறளின் அங்கவியல் தெளிவுரை-தமிழ் இலக்கிய வினாவிடைப் பேழை-தேடலின் ஒரு பக்கம் ஆகிய நூல்களின் சொந்தக்காரர் தேசியப் பத்திரைகளிலும் -சர்வதேச இணையப்பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான சமூகவியல் மற்றும் இலக்கிய ஆய்வு-விமர்சனம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவந்துள்ளார்
மேடை விமர்சனங்களால் பிரபல்யம் பெற்ற இவர் இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள எழுத்தாளர்களின் கவிதை-சிறுகதை-நாவல்-குறும்படம்-கவிதை இறுவெட்டு உள்ளிட்ட வெளியீடுகளை விமர்சனம் செய்துள்ளார் பன்னூலாசியர் எஸ்.எம்.எம்.மூஸா-றாஹிலா தம்பதிகளின் 5 ஆவது புதல்வாரன இவர் கவிஞர் மருதமுனை விஜிலியின் சகோதரர் ஆவார்

2-PMMA CADER-16-12-2015_Fotor 3-PMMA CADER-16-12-2015_Fotor