இஸ்ரேலிய நலன்புரி நிலையம் இலங்கையில் அமையப்பெறுவது நம்மக்களின் ஐக்கியத்துக்கு ஆபத்து கி.மா.உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

 

-எம்.வை.அமீர்-

 

அண்மைக்காலமாக இலங்கையில், இஸ்ரேலிய நலன்புரி நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் அதற்க்கு எதிராக கிழக்குமாகாணசபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போது,  இஸ்ரேலிய நலன்புரி நிலையம் இலங்கையில் அமையப்பெறுவது நம்மக்களின் ஐக்கியத்துக்கு ஆபத்தாகிவிடும் என்றும், அவர்கள் மக்களை சிறைப்படுத்தி மக்களின் சுதந்திர நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி மனிதப்பேரவலங்களை செய்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவித்தார். 

aarif samsudeen

 

சபையில் தொடர்ந்து உரையாற்றிய ஆரிப் சம்சுதீன், தன்னுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அநீதியையும் மற்றைய நாடுகளில் அரங்கேற்றுவதற்கு தயங்காத நாடே இஸ்ரவேலாகும் என்று பலஸ்தீனில் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்ற அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிராக அன்று நெல்சன் மண்டேலா குரல் கொடுத்தார், அதனால் அவர் சர்வதேச தலைவன் என்று புகழப்பட்டார். மகாத்மா காந்தி பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தார், யூத அரசு ஓன்று ஸ்தாபிக்கப்படுவதனை மகாத்மா காந்தி எதிர்த்தார். அதனால் மகாத்மா என்று புகழப்பட்டார். எமது முன்னாள் ஜனாதிபதி கூட பாலஸ்தீனிய நற்புறவு அமையத்தினுடைய நீண்டகால தலைவராக  இருந்தார். 1974 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக அவர் பாராளுமன்றம் சென்றதிலிருந்து தொடர்ந்து பாலஸ்தீனிய நற்புறவு மன்ற தலைவராக தொடர்ந்து அந் நற்புறவை பாதுகாத்து வந்துள்ளார், ஆகவே இந்த இஸ்ரேலிய நலன்புரி நிலையம் இலங்கையில் அமையப்பெறுவது இன்று நாட்டில் எமக்குள் இருந்து கொண்டிருக்கும் ஒற்றுமையை, நல்லாட்சியினை, நல்ல அமைப்பினை குலைப்பதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான சதியாக இதனை கருதிக்கொண்டிருக்கின்றோம்.

 

கிழக்குமாகாணசபை  எங்களுடைய நல்ல எண்ணங்களை புரிந்துகொள்ள வேண்டும். எம்முடைய அச்சங்களை புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எதற்க்காக அச்சப்படுகின்றோம், எமது சகோதர இனக்குழுமங்கள் பட்ட துன்பங்களை நாங்கள் படக்கூடாது என்று அச்சப்படுகின்றோம். நின்மதியாக வாழவேண்டும் என்ற சாதாரண நற்பாசை எங்களது மனதுகளிலே இருந்து கொண்டு இருக்கின்றது. பொதுபலசென என்பதன் உருவாக்கத்தின் பின்னல் இருப்பது யார்? அந்தக் கேள்விக்குரிய விடை தெரிய வேண்டும். பொதுபலசென இயக்கத்துக்கு காலியில் ஒரு ஹெட்குவாட்டஸ், ஒரு தலைமை அலுவலகத்தினை வாங்கி அதனை திறந்து வைத்தது எமது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச, திறந்தது வைத்தது ஜேர்மனிய யூதர் ஒருவர் நன்கொடை செய்த அந்த கட்டடம் தான் என்பதனை நீங்கள் நினைவு வைத்துக்கொள்ளவேண்டும். ராஜீவ் காந்தியின்  கொலையின் பின்னல் எந்த சூத்திரதாரிகள் இருக்கிறார்கள் என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பின்னல் எந்த சூத்திரதாரிகள், தந்திரோபாயம் சர்வதேச சக்திகள், ஏன் அந்த ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். என்ற மர்மம் துலங்க வேண்டும். அந்த மர்மதிற்கு பின்னாலும் யூத சக்திகள் இயங்கிக் கொண்டிருகின்றன. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்க்கு பின்னல் நாங்கள் வெளிப்படையாக புலிகளை காணுகின்றோம். ஆனால் அந்த முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதற்க்கு பின்புலமாக இயங்கிய சக்தியை கண்டு நாங்கள் அஞ்சுகின்றோம். மீளவும் இந்த யூதர்களுக்கு இஸ்ரேலியர்களுக்கு  இடம் கொடுப்பதன் மூலம் நாங்கள், எங்களது இருப்பிடங்களை இழந்து விடுவோம். அல்லது எங்களது நிலங்களை இழந்துவிடுவோம். நாங்கள் எமது சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்படுவோம், எங்களது சகோதர இனக்குடும்பங்கள் எமக்கு எதிராக திரும்பும் என்பதை கண்டு அஞ்சுகிறோம் என்றும் தெரிவித்தார்.

 

எங்களுடைய நியாமான அச்சத்துக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் இஸ்ரேல் எப்போதும் நமது அபிவிருதியிணைய நிச்சயமாக நாடாது. எமது மக்களுடைய அபிவிருதையினை நல்வாழ்வினை நிச்சயமாக நாடாது. தங்களுடைய ஆயுத விற்பனை, தங்களுடைய கேந்திர முக்கியத்துவம், தங்களுடைய சாம்ராட்சியம், வேகமாக்கும் வரை தங்களுடைய தனி சாம்ராட்சியதிணை இஸ்ரேல் சியோநிசிய சக்திகள்  கனவு கண்டுகொண்டிருக்கின்ற்றது. ஆகவே இந்த சாம்ராட்சியதிணை நிறுவுவதற்கான அவர்களுடைய காலூன்றுதல் தான் இந்த இஸ்ரேல் நலன் காப்பு மையம்.

 

எமது அரசு 1979 ஆம் ஆண்டுகளில் கூட ஒரு நற்புறவு கிரிக்கட் போட்டிகளை நடத்திக்கொண்டிருந்தது போக, எமது இலங்கை அணி இஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாட மறுத்தது 1979 என்று நினைக்கின்றன் இலங்கை கிரிக்கட் அணி இங்கிலாந்தில் நடந்த பதினைந்து நாடுகள் பங்கேற்ற இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டி தொடரின் போது இஸ்ரேலுக்கு எதிராக விளையாட மறுத்தது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு என்று அங்கீகரிக்க மறுத்த இந்த இலங்கை என்ற தாய் நாடு, இலங்கையர் என்ற எங்களுக்கு சம உரிமையை தந்து கொண்டிருக்கின்ற இந்த நாடு, சக முஸ்லிம் சகோதரர்களுடைய உணர்வுகளை மதித்து 1979 இல் இலங்கை அணி இஸ்ரேலிய அணிக்கு எதிராக விளையாட மறுத்தது ஆகவே எங்களுடைய உணர்வளுக்கு மதிப்பளியுங்கள்.

 

நாங்கள் மட்டும் பாதிப்படயப்போவதில்லை, தமிழன் ஒருவன் நின்மதியாக இந்த இலங்கையில் வாழமுடியாமல், ஒரு சிங்களவனும் ஒரு முஸ்லிமும் நின்மதியாக வாழமுடியாது என்ற, ஒரு தாரக மந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்.  அதேபோல் சிங்கள பெரும்பான்மையினரும் நிமதியாக வாழ முடியாது. மற்றைய சிறுபான்மை இன குடும்பங்களும் நின்மதியாக வாழ முடியாது. நின்மதி ஒரு சகோதரத்துவ பண்பியலை நாங்கள் வெளிப்படையாக  வேண்டி இருக்கின்றோம். நாங்கள் சன்றியல் ரீதியாக இவ்வளவு ஏன், இஸ்ரேல் என்ன தீங்குகளை விளைவித்துக் கொன்டிருக்கின்றது என்ற ஒரு தகவல் ரீதியான விடயங்களை நாங்கள் உங்களுக்கு  சான்றியல் ரீதியாக நாங்கள் கோடிட்டுக்காட்டுவோம்.

 

எமது கடற்படையினர் இஸ்ரேலுக்கு ஆயுதக் கொள்வனவுக்கு சென்ற பொழுது இவர்கள் ஒரு நாகரீகம் அடையாத உலகில் இருந்து வந்திருக்கின்ற குரங்குகள் இவர்களுக்கு நீங்கள் வாழைப்பழத்தை கொடுத்து அனுப்பினாலும் இவர்கள் கோடிக்கணக்கில் அதனை வாங்கிச் செல்வார்கள் என்று கேவலப்படுத்திய (விக்டர் ஒச்ற்றவேட் கின் மொசாட் ஏஜென்ட் எழுதிய புத்தகத்தில் இலங்கை கடப்படையினர் கடப்படை லேப்டினர் அதிகாரிகள் எவ்வாறு மலினப்படுத்தப்பட்டார்கள்  என்ற விடயத்தை அந்த புத்தகத்தில் தெட்டத் தெளிவாக கூறப்பட்டிருந்தது. 

 

இந்த இஸ்ரேலிய நலன்புரி அமையம் என்பது நாட்டிற்க்கு ஒரு தீங்கு, எமது நாட்டின் ஒரு சகஜ வாழ்வுக்கு தீங்கு, ஒரு நல்ல சகுனமாக அமையாது அதனை முளையிலே கிள்ளி எரிறிய வேண்டும்.  நாங்கள் நின்மதியாய்  இருப்பது இது ஒரு சிரண்டிப் எனப்படுகின்ற ஒரு சுவர்க்க பூமி என்று வரண்க்கப்பட்ட ஒரு பிரதேசம், எமது தீவு இது. எமது தீவில் அமைதி நிலவுகின்றது. இந்த தீவில் பரஸ்பர நம்பிக்கை நிலவிக்கொண்டிருகின்ற்றது. இந்த தீவில் மீளவும் பிரச்சினைகள் வேண்டாம். ஒரு பயங்கரவாதத்தின்  ஏஜென்ட் என்று சொல்லக்கூடிய, பிரச்சனைகளை கொண்டே தன்னுடைய வாழ்வினையும் தன்னுடைய நிலைப்பாட்டினையும் கொண்டிருக்கின்ற இஸ்ரேல் என்ற ஒரு நாட்டினுடைய உறவு, எமக்கு வேண்டாம் என்று கூறி அதற்க்கு எதிராக, ஒற்றுமையாக  ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த கிழக்கு மாகாணசபை தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி தனது பிரேரணையை முன்வைத்தார்.