எதிர்வரும் 24ம் திகதி பூமியை கடக்கும் பிரமாண்ட விண்கல்லால்; நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு !

எதிர்வரும் 24ம் திகதி பூமியை ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் பிரமாண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது என்றும் அச்சம் எழுந்துள்ளது.
2003-SD220-arecibo-2

விண்வெளியில் பல்வேறு பாறைகள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது கோள்களுக்கு அருகில் வந்து செல்வது உண்டு. ஆனால், இதுவரையில், பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் நடந்தது இல்லை. 

இந்நிலையில், 2003 எஸ்டி220 என்று பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்கிறது. 

இந்த விண்கல் சுமார் 2.41 கி.மீ. பரப்பளவுக்கு பெரிதாக உள்ளது. இந்த விண்கல் வரும் 24ம் திகதி பூமியை கடந்து செல்ல உள்ளது. அதாவது, பூமியில் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் கடந்து செல்ல உள்ளது. 

இந்த தூரமானது, பூமியில் இருந்து நிலா இருக்கும் தூரத்தை காட்டிலும் 28 மடங்கு அதிகமானது. ஆனாலும், கோள்களுக்கும், விண்கல்லுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிடும்போது இது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

இந்த தூரத்தில் விண்கல் கடந்து செல்லும்போது, பூமியில் நிலநடுக்கம் ஏற்படும், எரிமலைகள் சீறத்தொடங்கும் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

எனினும், நீண்ட காலமாக கோள்களை ஆராய்ந்து வரும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், அதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இதற்கு முன்பு எத்தனையோ விண்கல் பூமியை கடந்து சென்றுள்ளன. 

அப்போது இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டதாக எந்த வரலாறும் இல்லை என்று கூறுகின்றனர்.கடந்த 2003ம் ஆண்டில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ஆண்டின் எண்ணும் இதனுடன் சேர்ந்துள்ளது. இதை டெலஸ்கோப் மூலம் 24ம் திகதி, பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.