இலங்கை அரசாங்கத்தின் கிராமிய இராஜ்ஜியத் திட்டத்திற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.
2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிராமிய இராஜ்ஜிய திட்டத்தின் கீழ் நேரடியாக குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய மற்றும் மாகாண ரீதியான அபிவிருத்தித் திட்டம் குறித்த சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
இது மாகாண சபை மற்றும் அதன் அதிகாரங்களை புறந்தள்ளும் ஒரு செயற்பாடாகும் என வடக்கு முதல்வர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் 2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபை அபிவிருத்தி வேலைகளுக்கு மத்திய அரசாங்கம் 40 வீதமான நிதியை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் விக்னேஸ்வரன் இதன்போது குற்றம்சாட்டினார்.