நல்லாட்சி அரசாங்கம் கிராமப் புறங்களை அபிவிருத்தி செய்யும் இலக்கோடு செயற்படுகிறது – பிரதிஅமைச்சர் ஹரீஸ்

 

ஹாசிப் யாஸீன்

நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் கிராமப் புறங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடுசெயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

IMG_5376_Fotor

 

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டத்தில் 1000 குடும்பங்களுக்குசீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்டகுடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்இடம்பெற்றது. இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கிராமப் புறங்களை அபிவிருத்தி செய்வதற்கு பலதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதிகளும்ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கானவிலைகளை குறைக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு  வந்ததும்அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டது. இதனால் நாட்டின் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் தொடக்கம் முதலாளிமார் வரை நன்மையடைந்தனர். 

அமைச்சர் சஜீத் பிரேமதாச நாட்டின் வீடமைப்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவார் எனநம்புகின்றோம். ஏனெனில் அவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் புதல்வராவார். 

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா நாட்டில் 1 லட்சம் தொடக்கம் 10 லட்சம் வரையான வீடுகளைநிர்மாணித்து சாதனை படைத்த ஒரு செயல் வீரர். அதே பாணியில் அவரது புதல்வாரன  அமைச்சர் சஜீத்செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதன் மூலம் நாட்டில் வீடற்ற வறிய மக்களுக்கான வீடில்லாபிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என நம்புகின்றோம். 

இதன் முதற்கட்டமாக வீடுகளை நிர்மாணித்து பூர்த்தியடையாமல் காணப்படும் வீடுகளின்நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவே சீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் சஜீத்அமுல்படுத்தியுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிறைவு செய்யப்படாமல் விடப்பட்டிருக்கு அபிவிருத்தி வேலைகள் அனைத்தும்விரைவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது பிரதி அமைச்சர்தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம், வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் காரியாலய முகாமையாளர்ஏ.எம்.இப்றாகீம் உள்ளிட்ட அதிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.