பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித பெசிலிகா தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கத்தோலிக மக்களின் புனித ஸ்தலமாக விளங்கும் பெசிலிகா தேவாலயம், சித்திரங்கள் மற்றும் சிலைகளினால் அழகுப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரும் புனித பெசிலிகா தேவாலயத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
ஜனாதிபதியின் வத்திகானுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் இன்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.