ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

 
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 16.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த சுரங்கம் ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாகும்.

cb877e82-07c6-49ec-96d7-3f07bf9bfcd1_S_secvpf
அதானி சுரங்க பணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்த சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்தால், நிலத்தடி நீர், பலவகை உயிர்கள் மற்றும் சில பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதனால், அதானி குழுமத்தின் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான கன்சர்வேஷன் க்ரூப் கோஸ்ட் அண்ட் கன்ட்ரி என்ற அமைப்பு புகார் அளித்து இருந்தது. 

இந்த மனுவை விசாரித்த பிரிஸ்பேன் லேண்ட் நீதிமன்ற தலைவர், மனுதாரரின் மனுவை தளளுபடி செய்தார். மேலும், அழிந்து வரும் கறுப்பு கழுத்து குருவிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அதானி நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்க அனுமதி வழங்கும்படி மாகாண சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

எனவே சுற்றுச்சூழல் தொடர்பான சில அளவுகளை ஏற்க நிறுவனம் ஒப்புக்கொண்டால், சுரங்கம் அமைக்க தடையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.