அபு அலா–
இலவசமாக பெற்றுக்கொள்ளும் பொருட்களை நாம் யாருமே அதை கவனத்திற்கொள்வதில்லை. ஆனால் 50 ரூபா பணம் கொடுத்து வாங்கும் ஒரு சாதாரண அப்பியாசக் கொப்பியை பாதுக்கா மிகப் பெருமதியான கவரினைப்போட்டு அந்த கொப்பியை மிகவும் கன்னியமாக பாதுகாத்து வருகின்றோம் என அக்கரைப்பற்று பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌசி தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் மிக வறிய 260 குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 3 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பாடசாலை பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை (15) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் கல்விக்கு எப்போதும் உதவியாக இருக்கவேண்டும். கல்விக்கு உயிர்கொடுப்பவர்கள் யாரும் மரனித்ததில்லை. அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் அவர்களின் நாமம் உலகம் முடியும்வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். இவ்வாறான விடயங்களுக்கு உதவிசெய்ய நாம் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.
எமது நாட்டின் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படுகின்ற பாட நூல்களை மிக கன்னியமாக பாதுகாத்து வரவேண்டும். அதற்காக இலங்கை அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவுசெய்து எமது மாணவச் செல்வங்களின் கல்வி நடவடிக்கைகளை உயர்த்தவேண்டும் அவர்கள் எமது நாட்டில் சிறந்ததொரு பிரஜைகளாக வாழவேண்டும் என்ற ஒரே நோக்கோடு எமது அரசு செயற்பட்டு வருகின்றது. இலவசமாக கிடைக்கும் பொருட்களை யாரும் மிக எளிதாக எடைபோடக்கூடாது என்றார்.