அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்!

இரண்டாயிரத்து 750 கி.மீ தொலைவு வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட, அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது. 
f5a8c5a1-e3cb-4500-be01-b167e98263f2_S_secvpf
இது தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை அணுகுண்டு மற்றும் வழக்கமான வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு 2,750 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது. 

இன்று நடந்த ஏவுகணை சோதனை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷாஹீன் ரக ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்துவரும் பாகிஸ்தான் ஷாஹீன்-1, ஷாஹீன்-2 சோதனைகளை கடந்த ஆண்டு நடத்திய நிலையில் கடந்த 11-ம் தேதி ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. 

இந்த நிலையில், இன்றைய ஷாஹீன் 1-ஏ ஏவுகணை சோதனையின் வெற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.