முன்னாள் அமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2012-2015 காலப் பகுதியில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த தகவல்களை உரிய முறையில் வழங்கவில்லை என, இவர் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஐந்து வழக்குகளைத் தொடர்ந்திருந்தது.
குறித்த வழங்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்குக்கு தலா 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவித்து, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய, உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நீதிமன்ற அனுமதியின்றி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வௌிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.