தற்போதைய நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்தரங்கச் செயலாளர், அலுவலக உதவியாளர் மற்றும் சாரதி ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே பாராளுமன்ற மறுசீரமைப்பு விவகாரங்கள் அமைச்சின் மூலம் ஊதியம் வழங்கப்படுகின்றது.
இதனை மாற்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 18 பேர் வரையிலான பணியாட்களை வழங்கி, அவர்களுக்கான ஊதியத்தை பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான பணியாட்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர் பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான பணியாட்கள் தொகுதியும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.