ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பாவின் செல்வந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட கப்பல் !


ஐரோப்பாவின் செல்வந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று வருகை தந்துள்ளது.
ship01

எம்.எஸ்.யுரோப்பா என்ற பெயர் கொண்ட இந்த ஆடம்பரக் கப்பலில் சுமார் 380 பேர் பயணிக்கும் வசதி உள்ளது. ஐரோப்பாவின் ஓய்வு பெற்ற முதியோர்களே இவ்வாறான ஆடம்பரக் கப்பல்களை உலகம் சுற்றும் தமது பயணங்களுக்குத் தெரிவு செய்து கொள்கின்றனர். 

இந்த நிலையில் ஹம்பாந்தோட்டையை  இன்று வந்தடைந்த கப்பலில் வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 200 பேர் யால, பூந்தல, கதிர்காமம், உடவளவை ஆகிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சென்றுள்ளனர். 

இவர்களுக்கான சுற்றுலா மற்றும் போக்குவரத்து வசதிகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை ஏற்பாடு செய்துள்ளது.

ship03