எஸ்.எம்.அறூஸ்
கலாபூஷணம் அரச விருது விழா இன்று செவ்வாய்க்கிழமை (2015-12-15) மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ” ஸ்ரீ லங்கா யூத்” மண்டபத்தில் நடைபெற்றது.
உள்ளக அலுவல்கள்,வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றம்.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துக்கலாச்சார அமைச்சர் சுவாமிநாதன் உட்பட நிர்வாக அதிகாரிகள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்,சிங்கள.முஸ்லிம் கலைஞர்கள் விருதுடன் சான்றிதழ் மற்றும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதில் பாலமுனையைச் சேர்ந்த ஏ.எல்.ஜமால்தீன் கலைத்துறைக்காக ஆற்றிய சேவைக்காக கலாபூஷணம் விருது வழங்கிக் கெரவிக்கப்பட்டார்.