எப்.முபாரக்
திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் நத்வத்துல் உலமா மத்ரஸாவுக்கான வீதியையும்,மையவாடிக்குமான மின்னினைப்பு மற்றும் மின் கம்பங்களின் வெளிச்ச வசதியினை ஏற்படுத்தி தருமாறு கோரி கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.மகஜர் ஒன்றினை கிழக்கு மாகாண சுகாதார கிராமிய மற்றும் மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸிரிடம் திங்கட்கிழமை (14)மாலையில் சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து கையளித்தார்.
அம்மகஜரில் மூதூர் பிரதேசம் பல வழிகளில் பின் தங்கிய பிரதேசமாகும் எந்தவொரு பகுதியும் முழுமையான வளங்களை கொண்டதாக அமையவில்லை அதில் முக்கியமாக மின்சாரம் மற்றும் வீதியைமும் குறிப்பிடலாம். அந்த வகையில் தான் இப்பிரதேச மக்களின் நன்மை கருதி கருதி குறிப்பிட்ட பிரதேசங்களை புனரமைத்து தருமாறு அம்மகஜரில் கோரப்பட்டிருந்தது.
அம்மகஜரில் கோரப்பட்டிருந்த விடயங்களை கூடிய விரைவில் ஏற்படுத்தி தருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் 2016ஆம் நிதியாண்டின் ஒதுக்கீடுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. அதில் மூதூர் மனாருல் ஹீதா மத்ரஸாவின் வீதிக்கும்,மின்சார இணைப்புக்குமாக இருபது இலட்சம் ரூபாவினையும்,திருகோணமலை ஜமாலியா மையவாடியின் மின்னினைப்புக்கும் மின் கம்பங்களின் வெளிச்சத்திற்குமாக இருபது மில்லியன் ரூபாவினையும்,மற்றும் திருகோணமலை சோனகர்வாடி மையவாடிக்கும் மின்னினைப்பு புனரமைக்குமாக பத்து மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இங்குசுகாதார அமைச்சர் தெளிவுபடுத்தினார்.