ஏ.எஸ்.எம்.ஜாவித்
இன்றிரவு (14) குணசிங்கபுர தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை பொலிஸார், பொதுமக்கள் மற்றும் தீயணைக்கும் படையினரும் இணைந்து தீயை அணைத்தனர் மேற்படி தீ அனர்த்தத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கடைத் தொகுதியின் சுவர் ஓரத்தில் காணப்பட்ட குப்பைகளில் யாரோ நெருப்பை போட்டிருந்ததால் மேற்படி தீ ஏற்பட்டதாகவும் அதனை உடன் கண்டு அணைத்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.