தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்படும் மருத்துவ கட்டணங்களை குறைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அதிக பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தினந்தோரும் முறைப்பாடுகள் கிடைப்பதாக அதிகார சபையின் தலைவர் ஹஷித திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்கு வெவ்வேறு வைத்தியசாலைகளில் வித்தியாசமான தொகை பணம் அறிவிடப்படுவதால் அதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளமுடியாத சோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலைகளில் தாங்கி கொள்ளமுடியா அளவுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அதிகார சபையால் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.