ஹாசிப் யாஸீன்
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் கூட இலஞ்சமாகவேபார்க்கப்படுகின்றது. எனவே உத்தியோகத்தர்கள் இலஞ்சம், ஊழல் விடயங்களிலிருந்து தவிர்ந்துகொண்டு தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்குவதோடு தொழில்களையும் பாதுகாத்து கொள்ளவேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்உத்தியோகத்தர்கள் இலஞ்ச, ஊழலற்ற சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உறுதி மொழிஎடுக்கும் நிகழ்வு நேற்று (09) புதன்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிபிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர்எம்;.எம்.உசைனா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.சீ.ஏ.நஜீம், எஸ்.றிபாயா உள்ளிட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உத்தியோகத்தர்கள் அனைவரும் இலஞ்சம், உழலுக்கு எதிராக உறுதி மொழிஎடுத்துக்கொண்டனர்;.