துறைமுக அதிகார சபையின் நிதி புஸ்பா ராஜபக்சவிடம்..!

 

அஷ்ரப் ஏ சமத்

இலங்கை துறைமுக அதிகார சபையின்  கொள்களன் மேற்கொள்ளும் ஒரு சீன கம்பனியின்  நிதி கடந்த அரசில் 14 மில்லியன் ருபா  புஸ்பா ராஜபக்ச பௌன்டேசனுக்கு  சென்றுள்ளது.

images

துறைமுகங்கள் அமைச்சா் அர்ஜன ரணதுங்க  நேற்று பாராளுமன்றத்தில் இதனை கூறினாா்.

இலங்கை துறைமுக அதிகார சபையில் சீன கம்பனி ஒன்ற கொள்களன்களை இறக்குமதி செய்யும் நிறுவனமான சீ.ஜ.சீ.டி கம்பணிக்கும் துறைமுக அதிகார சபைக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்சவின் துனைவியாரின் பெயரில் இயங்கும் பௌன்டேசனுக்கு 14.4 மில்லியனை வழங்கியுள்ளது. 

இந்த சீன கம்பனி  80 வீதத்தை தனக்கும் துறைமுக அதிகார சபைக்கு  15 வீதமுமே  கிடைக்கப் பெற்றுள்ளது. 

இக் கம்பணியின் புஸ்பா ராஜபக்சவுக்கு  அனுப்பிய காசோலை இலக்கம் தன்னிடம் உள்ளதாகவும்  அமைச்சா் அர்ஜூன நேற்று பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்தின் துறைமுக விவாதத்தின்போதே இதனைத்  தெரிவிததாா்.

இந்த சீன கம்பனி இந்த பணத்தைக் கொடுத்து துறைமுகத்தில் பல வரப்பிரதாசங்களை பெற்றுள்ளது. கொள்ளகலன் தாமதிப்பு போன்ற வற்றில் அது நன்மை பெற்றுள்ளது.