அம்பாரை மாவட்ட கால் நடை உற்பத்திப் பயனாளிகளுக்கு உள்ளீட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!

 

IMG_8933_Fotor

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

அம்பாரை மாவட்டத்திலுள்ள கால் நடை உற்பத்திப் பயனாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான பல்வேறு உள்ளீட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காரைதீவு அரச மிருக வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்ட கால்நடை உற்பத்தித் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.எம்.ஏ.எம்.நதீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கிறிஸ்னபிள்ளை துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் மாகாண சபை உறுப்பினர் பி.கலையரசன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கே.சிவானந்தன், கால்நடை மிருக வைத்திய மாகாணப் பணிப்பாளர் டாக்டர்.எம்.ஏ.முகம்மட் பாஸி, மேலதிக பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.எம்.சீ.எம்.ஜுனைட் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கால் நடை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பசுவிலிருந்து பால் கறக்கும் இயந்திரம், நீர்ப்பம்பிகள், புல் வெட்டும் இயந்திரம், பால் சூடாக்கும் இயந்திரம், துவிச்சக்கரவண்டிகள், நீர்த்தாங்கிகள் போன்றவற்றுடன் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமின்றித் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய். பத்தாயிரம்(10,000) பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மாகாண அமைச்சர் கே.துரைராச சிங்கம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘கபடத்தனமான அரசியல்வாதிகளின் கடைசிப் புகலிடம் தேசப்பற்று! சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக முன்வைக்கப்பட்டு, அதனுடைய நியாயம் உணரப்பட்டு, அத்துரலிய ரத்ன தேரர் அத்தகையவர்கள் கூட விடுதலை செய்யப்பட வேண்டியது நியாயமானது என்று சொல்லுகின்ற இந்த நேரத்திலே.. பழைய இந்த சால்வை போட்ட மனிதர் (மஹிந்த) சொல்லுகின்றார் இவர்களை விடுதலை செய்து விட்டால் இந்த நாடு அழிந்து விடும் என்று! இவ்வாறான கொடுPரம் இன்னும் இருக்கின்ற போது இந்த ஈழமாதா ஒரு போதும் சிரிக்கமாட்டார். இவ்வாறான பிள்ளைகளைப் பெற்று விட்டோமே என்று வேதனைப்படுவாள். எனவே இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

IMG_8987_Fotor_Collage_Fotor