இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரீப்-சுஷ்மா சுவராஜ் சந்திப்பில் முடிவு!

 

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். மேலும் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி சர்தாஜ் அஜீஸ் ஆகியோரையும் அவர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

3e813bef-cb9b-47a3-950f-e99a9fb91ee6_S_secvpf

பின்னர் சுஷ்மா சுவராஜும், சர்தாஜ் அஜீசும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்திய-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சமீபத்தில் பாங்காக் நகரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அப்போது சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.