சீனாவை பின்தள்ளி இந்தியாவில் புல்லெட் ரெயில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கைப்பற்றியது ஜப்பான்!

 

இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையிலான பாதைக்கு புல்லெட் ரயில் தயாரிக்கும் பணியை சீனாவிடம் இருந்து ஜப்பான் தட்டிச் சென்றுள்ளது. 

cbcd5ff2-1c14-4c43-98f9-9d1eb4849f02_S_secvpf

98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புல்லெட் ரெயில் தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து ஜப்பான் அதிபர் ஷின்ஸோ அபே 3 நாள் சுற்றுப்பயணமாக இந்த வாரம் இந்தியா வரும் போது திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதர பாதைகளில் சீனாவின் முதலீட்டை இந்தியா எதிர்ப்பார்க்கிறது. இதில் சென்னை முதல் டெல்லி வரையிலான சுமார் 2,200 கிலோமீட்டர் தூர பாதைக்கான அதிவேக ரயிலை இந்தியா மற்றும் சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் புதுடெல்லி மற்றும் மும்பை கோரிடார் வரையிலான பாதையிலும் சீனாவை ஈடுபடுத்த இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு கொள்கிறது. முன்னதாக வெளிநாட்டில் தனது முதல் அதிவேக ரயில் திட்டத்தை சீனா இந்தோனிசியாவில் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.