கீழைத்தேய நாடுகளில் இலஞ்ச ஊழல் காணப்படுகின்றது – எஸ்.அருள்ராசா

எப்.முபாரக் 

இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றன.எனவே, ஊழலை ஒழிக்க சகலரும் உறுதியாக செயற்பட வேண்டும் என
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா தெரிவித்தார்.

article_1449652497-aaaaaaaa

சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஊழல் என்றால் என்ன என்பதற்கு பல வகையான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் டிரான்ட்பேரன்ஸி இன்ரெநெசனல் அமைப்பு ஊழல் என்பதற்கு ‘தனக்கும் தன்னைச் சார்ந்வர்களுக்கும் தனது அதிகாரத்தை முறைகேடான முறையில் பிரயோகித்தல்’ என வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் போன்ற காரணங்களினால் நம் நாடு அபிவிருத்தியில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலை விசாரணை செய்யும் ஆணைக்குழு 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 19ஆவது அரசியலமைப்பு சிர்த்திருத்த சட்டம் மூலம் இவ்வாணைக்குழு தமது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரச ஊழியரும் சரியான முறையில் சரியான நேரத்துக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையை செய்வதன் ஊடாக இவ்ஊழலை ஒழிக்க முடியும்.அதற்கு சகல ஊழியர்களும் திடசங்கற்பம்பூண வேண்டும் என்றார்.