அரச உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை இறை அச்சத்துடன் செய்ய வேண்டும்!

 

பி.எம்.எம்.ஏ.காதர்

ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும்  அவரவர் மன சாட்சிப் படி தங்களுக்கு ஒப்படைக்கப் பட்டுள்ள கடமைகளை    இறை அச்சத்துன் செய்வதன் மூலம்  எம்மால் வாசிக்கப் பட்ட ஊழல் ஒழிப்பு தின  உறுதி மொழி உண்மைப் படுத்தப் படும் என கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள் இன்று(09-12-2015)  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நடை பெற்றது  இங்கு உரையாற்றிய போதே  அவர் இதனைத் தெரிவித்தர்..

வலயக் கல்வி பணிப்பாளர்  தேசியக் கொடியேற்றி  நிகழ்வை ஆரம்பித்து வைத்து   உறுதி மொழி பிரகடனத்தை வாசித்தார் .ஏனைய  அதிகாரிகள் இஉத்தியோகத்தர்கள்  அந்த உறுதிமொழியை ஏற்று சத்தியப் பிரமாணம்  செய்து  கொண்டனர்.

பரிசுத்தமான  தேசம் ஒன்றை நாளைய சந்ததியினருக்கு உரித்தாக்கும் உயரிய நோக்குடன்  முன்னோடியாக அர்பணிப்புடன் தனிப்பட்ட ரீதியிலும்  தொழில் சார்ந்த வாழ்விலும்  சிறந்த வெளிப்படை தன்மையுடன்  பொறுப்புக் கூறும் வகையிலும்  அர்பணிப்புக் கண்ணோட்டத்துடனும்  இலஞ்சமும்  ஊழலும் அற்ற  கௌரவமான  பிரஜையாக அபிமானத்துடன்  வாழ்வேன் என்றும் சேவையாற்றுவேன் என்றும்  நான் திடசங்கற்பத்துடனும்  கௌரவத்துடனும் உறுதியளிக்கிறேன்  என்று அனைவராலும்  சத்தியப் பிரமாணம் செய்யப் பட்டது .

நிகழ்வில்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.அப்துல் ரஹீம்இபீ.எம்.வை.அரபாத் இகணக்காளர் எல்.ரீ.சாலிதீன் இநிருவாக உத்தியோகத்தர்  ஜீ .பரம்சோதி  உட்பட அனைத்து  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .

பிரதிக் கல்விப்  பணிப்பாளர்  எஸ்.எல் .அப்துல் ரஹீம் மற்றும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோரால் ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வு பற்றி உரையாற்றப்பட்டது.

2-PMMA CADER-09-12-2015_Fotor 3-PMMA CADER-09-12-2015_Fotor