இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50000 வீடுகளை கட்டுகிறது இந்தியா!

 

இலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

880cf756-f6c4-49ac-982d-8a403d3a91c5_S_secvpf
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு இத்தகவலைத் தெரிவித்தார்.

“இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் சேதமடைந்த வீடுகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் தற்போது 101368 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 ஏக்கர் நிலங்களை விடுவித்துள்ளது” என்றும் மத்திய மந்திரி தெரிவித்தார்.