ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
துணிச்சலுடன் மள்வானை சஹீத் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதீதியாக அமைச்சர் றிசாட் பதுர்டீன்...
வீடியோ:- நூல் வெளியீட்டு விழா:- youtube.com/watch?v=fM8i0y1RX1o
*************************************************************************************************
மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு பற்றி ஆய்வு ரீதியாக எழுதி வருக்கின்ற எழுதாளரும் பிரபல நூலாசிரியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹுசைன் ஆலிம் இப்னு அஹ்மத் சஹீத் இலங்கையில் இஸ்லாமியர்களின் வரலாற்றினை அடிப்படையாக வைத்து பூர்வீகத்தின் ஆணிவேரினைத் தேடி வெளிக்கொணர வேண்டிய சமூகப்பணியினை செய்யும் நோக்குடன் வரலாற்று தொக்குப்பினை நூலுறுவாக்கி அதனை கடந்த 27.11.2015 வெள்ளிக்கிழமை கொழும்பு விளையாட்டுத்துரை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைபவ ரீதியாக வெளியிட்டு வைத்தார்.
சீறீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதீதியாக வர்த்தக வானிபத்துரை அமைச்சர் றிசாட்பதுர்டீன் கலந்து சிறப்பித்ததுடன், அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, முன்னால் பாராலுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் பிரச்சன்ன மாயிருந்ததினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் உலக முஸ்லிம்களின் சொத்தாக கருதப்பட வேண்டிய இந்தநூலின் முக்கியத்துவத்தினை சமூக கண்டு கொள்ளத்தவரிவிட்டத்து என்பதனை அதீதிகள் தங்களது உரைகளில் சுட்டிக்காடியமையினை அவாதானிக்ககூடியதாக இருந்தமை ஒரு புறமிருக்க இவ்வாறான வரலாற்று முக்கியத்துவத்தினை ஆதரங்களுடன் தேடிக்கண்டுபிடித்து அதனை ஆவணமயப்படுத்திய நூலாசிரியர் சஹீத்தினை முஸ்லிம் சமூக முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதும் அதீதிகளினது வேண்டுகோளாக அமையப்பெற்றிருந்தது.
நூலாசியர் தனது நூலில் முதல் மனிதர் ஆதம் அலை அவர்களுக்கும் இலங்கைக்குமுள்ள தொடர்பினை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைத்துள்ள அதேவேலையில் ஆதம் அலை அவர்களது பாதம் பதிந்துள்ள பாவா ஆதம் மலை பற்றி பல்வேறு நூல்களிலும் ஆவணங்களில்லும் வெளிவந்துள்ள தகவல்கள் மற்றும் சான்றுகளை ஒன்று திறட்டி ஓர் ஆய்வு நூலாக மாற்றியுள்ளார். ஆதமின் பாதம் பதிந்துள்ள மலையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நூலாசிரியர் இதனூடாக பெருமுயற்ச்சி எடுத்துள்ளமையினை நூலில் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆதம்பற்றி கூறுவதற்கு படைப்புக்கலின் தோற்றம் மனிதன் படைக்கப்பட்ட முறை, ஆதம் நபியின் தோற்றம் என்பவற்றுடன் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையிலான முக்கிய நபிமார்களின் பிறப்பு தொடர்பான முக்கிய குறிப்புக்களையும் நூலாசிரியர் நூலில் அடக்கியுள்ளார். பாவா ஆதம் மலை இலங்கையில் சகல மததார்களாலும் மதிக்கப்படும் ஒரு இடமாக உள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்புகள் மங்கிவருக்கின்ற நிலையில் இஸ்லாத்திற்கும் இந்த மலைக்குமுள்ள தொன்மையான தொடர்பினை நூலாசிரியர் தனது உச்ச கட்ட முயற்சியின் பலனாக உலகறியச் செய்துள்ளார். இது தொடர்பாக ஆங்காங்கே சிதறிக்கிடந்த தகவல்களைத் திரட்டி மனுக் குலத்தின் தாயகம் எனும் நூலினை உறுவாக்கியுள்ளார்.
இந்த நாட்டில் பெரும்பான்மை பெளத்த மக்கள் சிறீபாத கண்ணியத்துக்குறிய பாதம் என்று சொல்வதன் அர்த்தத்தினை சேர் றொபட் நொக்ஸ் என்பவர் தனது குறிப்பில் விண்ணுலகிலிருந்து வந்த பெரிய புத்தர் கால் பத்தித்ததாக குறிப்பிட்டுள்ளதோடு பெரும்பாலான பெளத்த மக்கள் கெளதம புத்த பிரான் 500 சீடர்களுடன் களனிக்கு வந்த பொழுது பாவா ஆதம் மலையினை தரிசித்து கால் பாதித்த நம்பிக்கையோடும் பக்திப் பரவசத்தோடும் வருடா வருடம் தரிசிக்கும் வழமை பெற்ற இடமாக இருக்கின்றது. அதே போன்று இந்துக்கள் பாவா ஆதம் மலையில் சிவ பெருமானுடைய பாதச் சுவடு பதிந்துள்ளதாக நம்பி, சிவனொளி பாதமலை என்று அழைக்கின்ற அதே நேரத்தில் கிறிஸ்த்தவர்கள் ஆதத்தின் சிகரம் என்று பொருள்பட Adam’s Peak அடம்ஸ் பீக் என்று அழைக்கின்றனர்.
மேலும் உலகில் வாழும் அநேக மதங்களைப் பின்பற்றுவோரின் நம்பிக்கையின் அடிப்படையில் இது ஆதம் (அலை) உடைய பாதம் என்பதேயாகும். மேலும் உலகில் ஆதம் (அலை) என்று ஆதமின் பாலமென்றும் குறிப்பிடும் இடங்கள் இலங்கையைத் தவிர வேறெங்குமில்லை. சமீபத்திய நாஸா விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள விண்வெளியிலிருந்து எடுத்த ஆதமின் பாலத்தினை காட்டும் படமும் இதற்கு பெரியதோர் அத்தாட்சியாகும். இன்னும் இன்று வரை இக்கருத்திற்கு மாறாக பேசுவோர் எழுதுவோர் உலகில் எந்த மூலை முடுக்குகளிலும் இல்லை என்பதும் முக்கியமாக கனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களில்லிருந்தும் முழு உலக மக்களினதும் மனித குலத்தின் ஆதி பிதா ஆதம் நபியின் பாதச் சுவடு இலங்கை நாட்டில் பதியப்பெற்றிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது என்பதனை நூலாசிரியர் ஆணித்தரமாக நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது நாட்டில் நல்லாட்சி மலர்ந்து சகல இனங்களைச் சார்ந்தோருள் மிகப் பெரும்பான்மையினர் ஒன்றினைந்து, தேசிய அரசாங்கம் அமைத்து முன்னோக்கி செல்லும் இக்காலகட்டமானது இலங்கை வரலாற்றில் பொற்காலங்கலில் ஒன்றாகும். இப்பொன்னான யுகத்தில் புரையொடிப்போயுள்ள கசப்புணர்வுகள் அணைத்தும் மறங்கடிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவது அனைவரதும் மகிழ்ச்சிக்கும் சுபீட்சத்துக்குமுறிய நல்லதொரு சகுனமாகும்.
அந்தவகையிலே வாசிக்கும் பொழுது இஸ்லாமிய வரலாற்று உணர்ச்சிகளை தூண்டி அழுப்படிக்காமல் நூலின் இறுதித்தாள் வரைக்கும் வாசிக்க தோன்றுக்கின்ற இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான அணைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு சீர் தூக்கிப் பார்க்கும் அதே நேரத்தில் மனித குலத்தின் தந்தை ஆதமுடைய பாதச் சுவடு, முழு உலகத்தினரினதும் மரபுரிமைச் சொத்துக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். மறைக்கபடிருக்கும் இப்பாதச் சுவட்டினை வெளிக்கொணர்ந்து நாட்டின் கீர்த்திக்கும், புகழுக்கும், பொருளாதார சுபீட்சத்திற்கும் வழிகோல வேண்டும் என்ற பெரும் எதிர்பார்புடனே நூலாசிரியர் சஹீத் இந்த வராற்று ஆவத்தினை நூலுறுவாக்கியுள்ளார் என்பது நூல் வெளிவீட்டு விழாவிலிருந்தும் நூலில் அடங்கியிருக்கின்ற உண்மை தேடல்களின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அத்தோடு இந்நூலானது சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மீழ்பதிப்பு செய்யப்பட வேண்டும் என்பது நூலாசிரியரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.