மத்திய ஆசியா துணைகண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக டெல்லி, ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.