ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஒன்பது ஏ (9யு) சித்தியடைந்த சுமார் 205 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது தடவையாகவும் 2014ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒன்பது ஏ (9யு) சித்தியடைந்த சுமார் 205 மாணவர்கள் இன்று (06) பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் அஹமட் முனவ்வர் தலைமையில் கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் ஹாஜரா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொள்வதுடன் கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிமும் விஷேட அதிதியாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மத், கௌரவ அதிதிகளாக முஸ்லிம் மகளீர் கல்லூரி அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர். ஐக்கிய அரபு இராட்சிய தூதுவர் ஏ.கே. அப்துல் ஹமீட் அல்-முல்லா உள்ளிட்ட பல பிருமகர்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.