தேசிய கராத்தேப் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிழக்கு மாகாணத்தின் வசம் !

எஸ்.எம்.அறூஸ்
அனுராதபுரம்  உள்ளக அரங்கில் நடைபெற்ற 9 மாகாணங்கள் பங்கு பற்றிய 41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின்  ஆண்களுக்கான கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.பால்ராஜ் காட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும்,75 கிலோ கிராம் குமிட்டி பிரிவில்  சம்பத் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர்  தலைமையில் இடம்பெற்ற தேசிய கராத்தேப் போட்டியில் இலங்கையின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வீரா்கள் கலந்து கொண்டனர்.
கராத்தேப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.பால்ராஜ் கடந்த 2014ம் ஆ்ண்டு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்  கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பால்ராஜிற்கு வெள்ளிப்பதக்கம்தான் கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரா்களுமே  தேசியப் போட்டியில்  வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். கிழக்கு மாகாண அணியை வழிநடத்திச் சென்ற அதிகாரிகளில் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் இரண்டு வீரா்களுடன் நிற்பதைக் காணலாம்.
 
12308450_448354648692708_3030555392019775317_n_Fotor_Collage_Fotor
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக வடமத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரா்களுக்கான பதக்கங்களை அணிவித்தார்.
41 தேசிய விளையாட்டு விழாவின் முக்கிய போட்டிகள் நாட்டின் பல மாகாணங்களிலும் நடைபெற்று வருகின்றமை விசேட அம்சமாகும். இவ்விளையாட்டு விழாவின் இறுதி மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.