அரசியல் அனாதையாகிய மஹிந்த -சரத் பொன்சேகா

Fonseka_Fotor

நாட்டின் முக்­கிய பொறுப்­பு­களில் இருந்த தம்மை போன்ற பலரை பழி­வாங்­கி­ய­மை­யி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று அர­சியல் களத்தில் அநா­தை­யா­கி­யுள்­ள­தாக ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

 

சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு ஊழல் இல்லா நாடு என்ற தொனிப்­பொ­ருளில் ஜன­நா­யக கட்­சியின் மேதின பொதுக்­கூட்டம் நேற்று நார­ஹேன்­பிட்டி ஷாலிகா மைதா­னத்தில் இடம் பெற்­றது. இந்­நி­கழ்வில் பங்­கேற்று உரை­யாற்றும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

நிகழ்வின் ஆரம்ப கட்­ட­மாக கொழும்பு ராஜ­கி­ரிய சந்­தி­யி­லி­ரு­ருந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட பேரணி பொரளை ஊடாக நாரஹேன்­பிட்டி மைதா­னத்தை வந்­த­டைந்­தது.

பேர­ணியில் நூற்­றுக்­க­ணக்­கானோர் கலந்து கொண்­ட­துடன் ஊழல் இல்­லாத நாடு வேண்டும், மக்­களை ஏமாற்­றாத ஆட்­சி­யா­ளர்கள் வேண்டும் என்­ற­வாறு கோஷங்கள் எழுப்­பப்­பட்­டன.

இதன்­போது பேர­ணியில் ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, அவ­ரது பாரியார் அனோமா பொன்­சேகா உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய சரத் பொன்­சேகா, முன்பு நான் 3 முறை யுத்த பூமியில் தாக்­கு­த­லுக்கு இலக்­கான போதிலும் மீண்டும் என்னை தயார் படுத்தி கொண்டு யுத்­தத்­திற்கு சென்­றேன். ஆனால் எதிர்­பா­ராத விதத்தில் நான் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு உள்­ளான போது தான் புரிந்­தது. யுத்த வெற்­றியை அடைய முடி­யாது நீண்ட காலம் தடுத்­தவர் மஹிந்­த­வென்று.

அவ்­வாறு தெரிந்த போது யுத்­தம்­நி­றை­வ­டைந்­தது. நான் சிறையில் அடைக்­கப்­பட்டேன். அன்று அமை­தி­யாக இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. ஆனால் இன்று என்­நிலை கண்டால் மஹிந்­த­வுக்கு மூச்­சுத்­தி­ணறக் கூடும்.

நான் மட்­டு­மல்ல, நாட்­டிற்­காக உழைத்த பல முக்­கி­யஸ்­தர்கள் பழி­வாங்­கப்­பட்­ட­னர். அதனால் தான் இன்று மஹிந்­த­வுக்கு அர­சியல் களத்தில் அநாதை­யாக வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. மஹிந்­தவின் எண்­ணங்கள் பல இன்று நிறை­வே­றாது போயுள்­ளன. அவர் எதிர்பார்த்த மோச­மா­ன­தொரு ஆட்­சிக்கு மாறா­ன­தொரு ஆட்­சியே இன்று இடம் பெறு­வ­தால் அதனை கண்டு மஹிந்த நோயா­ளி­யாக மாறி­யுள்ளார்.

முன்பு மஹிந்­தவின் கோரிக்­கை ­க­ளுக்கு நான் இணங்­காத கார­ணத்­தினால் ராவணா பலய அமைப்­பினை கொண்டு என்னை மிரட்­டிய மஹிந்­த­வோடு முரண்­ப­டு­வது மலை­யொன்றில் தலையை தானே முட்டிக் கொள்­வது போன்று இருந்­தது. ஆனால் இன்று நான் விஸ்­வ­ரூபம் எடுத்­துள்­ளதால் மஹிந்த எனக்கு எறும்­புக்கு நிக­ரான உரு­வ­மாக விளங்­கு­கிறார் என்றார்.