கல்முனை தொகுதிக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

கல்முனை தொகுதிக்குட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை தமிழ் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 171 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கழமை (03) இடம்பெற்றது.

IMG_5344_Fotor
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் மாவட்டத்தில் ஆயிரம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனை தேசிய வீடமைப்பு அதிகார சபைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமையாள் ஏ.எம்.இப்றாகிம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாகளுக்கான சீமெந்து பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்.

IMG_5422_Fotor

இந்நிழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ,கலையரசன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்ட பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், எம்.எச்.கனி, எம்.லபநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாள் கலன்சூரிய, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனா.

IMG_5461_Fotor

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 10 பக்கட் சீமெந்து மானியமாக வழங்கப்பட்டது. இதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 58 குடும்பத்திற்கும், கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 65 குடும்பத்திற்கும், கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 48 குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.