-ஷபீக் ஹுஸைன்-
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வு இன்று (3) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீத் ஏ. கே. அல் முல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.