ஏனைய பாடசாலைகள் ஜனவரி 4ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம் மாதம் 8ம் திகதி முதல் 17ம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதோடு, விடைத்தாள் திருத்தும் பணிகள் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி முதலாவது கட்ட நடவடிக்கைகள் இம் மாதம் 28ம் திகதி முதல் ஜனவரி 5ம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இதன்பொருட்டு நாடுபூராகவுமுள்ள 55 நகரங்களிலுள்ள 87 பாடசாலைகளில் 109 மத்திய நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் இதற்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனாவரி மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பிலுள்ள ஷாகிரா வித்தியாலயம், அசோகா வித்தியாலயம், ஹட்டனிலுள்ள ஹைலென்ட் வித்தியாலயம், ஷாந்த ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயம், அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலை, திருகோணமலை ஒரிகிஸ்கில் விவேகானந்தா வித்தியாலயம், கல்முனை முஹமுத் பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பிலுள்ள ஷாந்த மைக்கல்ஸ், வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், மன்னார் ஷாந்த சேவியர் ஆண்கள் பாடசாலை, யாழ்ப்பாணத்திலுள்ள வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி மற்றும் இந்துப் பெண்கள் பாடசாலை உள்ளிட்ட 87 பாடசாலைகளிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இரண்டாவது கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.