விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு குவைத் உதவியளிக்கும் – பிரதி அமைச்சர் ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்

இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் கலாப் பு தாஹிர் அவர்களுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (01) செவ்வாய்க்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

ku6_Fotor

நாட்டின் சகல பகுதிகளிலும் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்கும், நவீன உள்ளக விளையாட்டு அரங்குகளை நிர்மாணிப்பதற்கும், மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கும் குவைத் நாட்டின் நிதி உதவிகளை பெற்றுத்தருமாறு பிரதி அமைச்சர் தூதுவரிடம்; வேண்டுகோள் விடுத்தார்.

சுனாமி மற்றும் யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களின் வாழ்வாதார மேன்பாட்டுக்கும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்கும் உதவியளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் நவீன கலாசார மண்டபம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான யோசi;னயினையும் பிரதி அமைச்சர் இதன்போது தூதுவரிடம்  முன்வைத்தார்.

இன்று நாட்டில் நல்லாட்சி மற்றும் அமைதியான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதனால், குவைத் நாட்டு முதலீட்டாளர்களையும், சுற்றுலா வரக்கூடியவர்களையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குவைத் நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களது சம்பளம் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைக்க அங்கு விசேட கரும்பீடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பிரதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொண்ட குவைத் தூதுவர், இவைகளை செய்துதருவதாக பிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு நிதி உதவியளித்தமைக்காக அப்பிரதேச அமைச்சர் என்ற வகையில் குவைத் நாட்டு அரசுக்கு பிரதி அமைச்சர்  ஹரீஸ் நன்றியை தெரிவித்ததுடன் இதனை கௌரவிக்கு முகமாக பிரதி அமைச்சர் குவைத்  தூதுவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

harees

இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேக செயளாலர் எச்.எம். அப்துல் ஹை ,
இணைப்புச் செயலாளர் எம். மிஸ்வர், வெளிநாட்டு வர்த்தக
முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி முகம்மட், தூதுவரின் செயலாளர்
அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.