புர்கினா பாசோ அதிபர் தேர்தலில் மார்க் கபோர் வெற்றி !

மேற்கு ஆப்பிரிகாவில் புர்கினா பாசோ என்ற குட்டி நாடு உள்ளது. இது 1960–ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. அதை தொடர்ந்து அங்கு அடிக்கடி புரட்சிகள் நடைபெற்று நிலையான ஆட்சி அமையவில்லை.

இதற்கிடையே அதிபர் பிளைஸ் காம்போர் ராணுவம் மூலம் ஆட்சியை பிடித்தார். 4 தடவை நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து அதிபரானார். அரசியல் சட்டத்தை மாற்ற முயன்றதால் போராட்டம் மூலம் அவர் கவிழ்க்கப்பட்டார்.

arton68381

அதை தொடர்ந்து நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. காம்போரிடம் இருந்து பிரிந்து எதிர்க்கட்சி தலைவரான ரோச் மார்க் கபோரும், முன்னாள் நிதி மந்திரி ஷெப்ரின் தியாப்போர் மற்றும் 2 பேர் போட்டியிட்டனர்.

அதில் கபோர் 53.5 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட ஷெப்ரின் தியோபோருக்கு 29.7 சதவீதமும் கிடைத்தது.