ஜனாதிபதி செயலகத்தினால் மூதூர் பிரதேசத்தில் போசாக்கு வேலைத்திட்டம் முன்னெடுப்பு !

எப்.முபாரக் 

ஜனாதிபதி  செயலகத்தினால் கிராம மட்டத்தில் போசாக்கான குழந்தைகளை உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் போஷாக்குக் குழு அமைத்து அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள போஷாக்கு குழுக்களுக்கு போஷாக்கு சம்மந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(1) மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.யூசுப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, செயலமர்வில் கலந்துகொண்ட போஷாக்கு குழுக்களுக்கு எவ்வாறான போஷாக்கு மிக்க உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும்,பிள்ளைகளுக்கு எவ்வாறான போஷாக்குமிக்க உணவுகள்  வழங்க வேண்டுமென்று விரிவுரையாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டதோடு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில்  போஷாக்கு மிக்க உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டுமென்ற விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இச்செயலமர்வில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள போஷாக்கு குழுக்களின் அங்கத்தவர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,மிருக வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.