கிழக்கில் தாய் மொழி தமிழிலே தேசியக் கீதத்தை இசையுங்கள் : கி.மா.ச உறுப்பினர் லாஹிர் !

எப்.முபாரக்  

 

 தாய் மொழி தமிழை நாம் வளர்க்க வேண்டும் அதற்கு மாறாக நாம் செயற்படுவது சிறந்தது அல்ல தேசியக் கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது கவலையளிக்கிறது. தாங்கள் சிங்கள மொழியை எதிர்ப்பவர்கள் அல்ல எமது உரிமைகளை தாமே மறுக்கின்றோம் இப்படியானால் எப்படி தாய் மொழியை வளர்ப்பது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.    

FB_IMG_1448955475242_Fotor

    இன்று செவ்வாய் கிழமை(1)திருகோணமலை தோப்பூர் அல் ஹம்றா மத்தியக் கல்லூரியின் தொழிநுட்ப அய்வு கூடத்தின் திறப்பு விழா அப்பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனைத் தெரிவித்தார்.                           

      அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:


FB_IMG_1448955503980_Fotor

மூதூர் கல்வி வலயமானது மிகவும் மின் தங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது இதற்கு காரணம் யுத்தத்தில் இருந்தோ மீண்ட ஒரு பிரதேசமாக காணப்பட்டமையாகும்.இப்பாடசாலை முப்பது வருட யுத்தத்தில் படையினர் வசமாக இருந்துள்ளது இங்கு பௌதீக வளங்களை ஏற்படுத்தும் தார் மீகப் பொறுப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கே உரியது.          அத்தோடு கிழக்கில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகள் தாய் மொழி தமிழிலே தேசியக் கீதத்தை இசையுங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார்.                      

 

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அகிலா கனகசூரியம் உட்பட அதிபர்கள். ஆசிரியர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.    

FB_IMG_1448955479175_Fotor