அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு மாநகர சபை அதன் சிறப்புமிகு 150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட்டமும் சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.
உலகின் பல பாகங்களைச் சோ்ந்த மேயா்கள் மற்றும் பிரநிதிகள் பங்கு பெறுகின்றனா். இம்மாநாடு ”எதிா்கால நகரங்கள்” எனும் தலைப்பில் இடம்பெறும். இதன் ஆரம்ப நிகழ்வில் சபாநாயகா் கரு ஜயசூரிய, அவா்கள் தலைமை தாங்குவாா். இதன் போது மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறப்புரை ஆற்றுவாா். இலங்கை மத்திய வங்கி ஆளுநா் அர்ஜூன் மகேந்திரன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளுவாா். என சபாநாயகா் கரு ஜயசுரிய தெரிவித்தாா்.
கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி இன்று(1) ஆம் திகதி கொழும்பு மேயா் ஹவுஸில் ஊடக மாநாடு நடைபெற்றது. இம் மாநட்டில் சபாநாயகா் கரு ஜயசூரிய மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேசப்பிரிய, கொழும்பு மாநகர மேயா் ஏ.ஜே.எம் முசம்மில் ஆகியோா் கருத்து தெரிவித்தனா்
இக் கொண்டாடட்ங்கள் பற்றி மேயா் முசம்மில் கருத்து தெரிவிக்கையில் –
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பழைமை வாய்ந்த மாநகர சபைகளின் ஒன்றான கொழும்பு மாநகர சபை, கொழும்பு வாழ் மக்களுக்கு உயா்தர நவநாகரிக வசதிகளை வழங்குவதில் முன்னணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கொண்டாட்டங்கள் 14ஆம் திகதி கொழும்பு மாநகர வளாகத்தில் நிகழும். பல்லினத்துவ பிரதிபலிக்கும் வண்னமயமான கலாச்சார நிகழ்வு அமையும். இக்காலாச்சார நிகழ்வின்போது மேயா்களாகவிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயா்கள் மற்றும் மதிப்புமிக்க அரச பதவிகளை வகிக்கும் மாநரக சபை அங்கத்தவா்கள் ஆகியோா் கொளரவிக்கப்படுவா்.
150 ஆண்டுகள் நிறைவையொட்டி 500 ருபா நாணயம் இலங்கை மத்திய வங்கியினால் அன்றைய தினம் வெளியிடப்படும். அத்துடன் நினைவு தபால் முத்திரை ஒன்றும் வெளியீட்டு வைக்கப்படும். கொழும்பு மேயரா்களாக பதவி வகித்த முன்னாள் பிரதமா் ,ஜனாதிபதி அமைச்சா்கள் சபாநயாகா் அமைச்சா்கள் அவா்களது குடும்பங்களை அழைத்து நினைவு விருது வழங்கப்படும். அல்லது மேயராக பதவிவகித்தவா்கள் உயிருடன் இருப்பின் அவா்களது சேவைகை்காகவும் நினைவுச் சின்னம் வழங்கப்படும்.
கொழும்பு மேயராக 1937 தொடக்கம் பதவி வகித்த 24 மேயா்கள் வாழ்பவா்கள் மற்றும் மறைந்தவா்கள் யாவரும் கொளரவிக்கப்பட் உள்ளனா். பதவி வகித்த சரவணமுத்து, சொக்மன், ஏ.ஈ குணசிங்க, ஜேர்ஜ் டி சில்வா, ஆர்.டி. மெல், குமாரன் ரத்னம், செல்லமுத்து, சீ.டி கிரேரோ, டி. ருத்ரா, என்.எம். பெரேரா, வீ.ஏ சுகதாச, எம்.எச். மொஹமத், வின்சன்ட் பெரேரா, ஜாபீா். ஏ. காதா், ஏ.எச்.எம். பௌசி, பீ.சிறிசேனா குரே, ஹூசைன் மொஹமட், ரட்னசிரி ராஜபக்ச, கே. கணேசலிங்கம், தேசபந்து கரு ஜயசூரிய, ஓமா் காமில், பிரசன்ன குணவா்த்தன, உவைஸ் மொஹமட் ்இம்தியாஸ்
இதனை விட முன்னாள் பிரதமா் எஸ்.டப்பிளியு பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தன, ஆர்.பிரேமதாச, ஆகியோா்கள் 1937 காலப்பகுதிக் முன்னா் மேயர்களாக கடமையாற்றியுள்ளனா். ஆளுனா் ஜனாதிபதியாக பதவி வகித்த வில்லியம் கோபல்லாவ, கொழும்பு மாநகர உறுப்பிணா்களாக பதவி வகித்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சா்கள் நிமல் சிறிபால டி சில்வா, அலவி மௌலானா, விமல் வீரவன்ச ,வாசுதேவ நாணயக்கார, மனோ கணேசன், மிலிந்த மொரகொட, , கீதாஞ்சன குணவா்த்தன, சனில் ஹந்துநத்தி ஆகியோறும் கௌரவிக்கப்பட உள்ளனா்.
கொழும்பு மாநரக சபையில் உறுப்பிணராக வந்து அரசியல் பல்கலைக்கழகம் போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமாராகவும் இந்த மாநகர சபை உருவாக்கியுள்ளது.
இதுவரை உலக நாடுகளின் 20 மேயா்கள் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா். என மேயா் முசம்மில் தெரிவித்தாா்.