சுகாதார அமைச்சின் பணிப்பாளார் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் !

காத்தான்குடி வைத்தியசாலைக்கு 100 மில்லியன் நிதி

 

ஜவ்பர்கான்

 

DSCN3753_Fotor
சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளார் நாயகம் பாலித மஹிபால காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்ட பணிப்பாளார் நாயகம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளார் நாயகம் பாலித மஹிபால காத்தான்குடி ஆதார வைத்திய சாலை இது வரை வளமில்லாத ஒரு ஆதார வைத்தியசாலையாக இருந்துவருவதை இப் போதுதான் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

எதிர் காலத்தில் இந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருவேன். அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வேன்.

இங்கு காணப்படும் திருத்த வேலைகளை மேற் கொள்வதற்காக 100 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கிடு செய்ய நடவடிக்கை எடுப்பேன். அதன் மூலம் இங்கு காணப்படும் திருத்த வேலைகளை மேற்கொள்ள முடியும்.

DSCN3755_Fotor

அத்தோடு இங்கு அவசியமான தேவையாக உள்ள வளங்களை ஏற்படுத்தப்படுவதுடன் இங்குள்ள ஆளணி தொடர்பில் எதிர் கலத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது பணிப்பாளர் நாயகம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பகுதி மற்றும் சிறுவர் விடுதி, செயற்படாமலிருக்கும் சத்திர சிகிச்சைக் கூடம் உட்பட வைத்தியசாலையின் பல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

DSCN3757_Fotor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையும் பணிப்பாளர் நாயத்துடன் விஜயம் செய்திருந்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ரி.ம்.மாஹீர் உட்பட அதன் உறுப்பினர்கள் காத்;தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.சுபைர் ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டதுடன் காத்தான்குடி ஆதார வதை;தியசாலை தொடர்பான குறைகளை பணிப்பாளர் நாயகத்துக்கு சுட்டிக்காட்டினர்.