பாடசாலைகளில் உக்கிரமடைந்துவரும் அரசியல் தலையீடு  !

சப்றின்

கடந்த சில மாதங்களாக பாடசாலைகளின் நிருவாக மட்டத்தில் அரசியல் தலையிடுகள் அசிங்கமாக அதிகரித்து வருவதனைக் காணக் கூடியதாக உள்ளது என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான எஸ் எம் சபீஸ்  தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்- 

safees

கடந்த  காலத்தில் அதிபர் தரம் சித்தி  பெற்றவர்கள் இருக்கும்  போது  தகுதி இல்லாத ஆசிரியகள் அதிபர்களாக நியமிக்கப் படுகின்றனர் என்று ஒருசிலர் அறிக்கை விட்டனர். இவ்வறிக்கைகள் மக்களை ஏமாற்றுவதற்காக  நடத்தப்பட்ட நாடகம் என்பதனை  அக்கரைப்பற்றில் தற்போது நியமிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் அதிபர்களை பார்க்கும் போது மக்கள் அறிந்து கொள்கின்றனர். அரசியல் தலைமைகளோடு அதிபர்கள் தொடபு வைத்துக் கொள்வது சகஜம்தான் அது பாடசாலை நிர்வாகத்துக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக  வேன்டியே அன்றி கட்சிக்கு ஆள்சேர்த்து கூட்டம் நடத்துவதற்கு இல்லை. அமைச்சர் அதாஉல்லா இருந்த காலத்தில் இவ்வாறு நியமனங்கள் நடக்கவில்லையா என்று  கேட்பீர்கள் நடந்தது உண்மைதான் அன் நியமனங்கள்  பாடசாலை சமூகத்தோடு கலந்து பேசிச் செய்யப்பட்டதொன்றாகும் .  

உதாரணமாக நலிவடைந்து இருந்த அஸ் – சாஹிறா  ஹிஜ்ரா மற்று ஜூனியர்  வித்தியாலயங்களின் அதிபர் நியமனம் அப்பாடசாலைகளின் கல்வி  அடைவு  மட்டத்தினையும் பௌதீகச் சூழலையும் முன் கொண்டு வந்துள்ளதை யாராலும் மறுதலிக்க முடியுமா? இன்று இருப்பவர்களை விரட்டி விட்டு அரசியலுக்குத்  தேவையானவர்களை நியமிக்க எத்தனிப்பது பாடசாலையின் வகுப்பறைக்  கல்வியினை சீர்குலைத்து, நெருக்கடிகளை வாய்ப்புக்களாக மாற்றும் வல்லமை, பழமையான சிந்தனைகளையும் காலாவதியான யோசனைகளையும் சவாலுக்கு அழைக்கும் தைரியம், உலகத் தரத்திலான மாணவர்களோடு போட்டி போடக்கூடிய தன்மை போன்றவற்றை  மாணவர்கள் மத்தியில் முற்றாக   மழுங்கடிக்கச் செய்து விடும். 

எங்களது கட்சி பாடசாலைகளின் நிருவாகத்தில் ஒருபோதும் தலையிடுவதில்லை என்று கூறுபவர்கள் அறியாமையில் கூறுகின்றார்களா என்று இன்று  நடந்தேறும் சம்பவங்களின் மூலம்   மக்கள் விளங்கிக்  கொண்டுள்ளனர். கல்வி அதிகாரிகள் உங்களது பதவிகளைப் பாதுகாக்க வேண்டும்தான் அதற்காக மாணவர்களின் மடியில் கைவைத்து விடாதீர்கள் ஏனென்றால் உங்களுக்கும் பிழைகள் உள்ளது என வேண்டிக்கொண்டார்.