ஜவ்பர்கான்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பால்நிலை சமத்துவ மாநாடு நடைபெற்றது.மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்ற இம்மாநாட்டை வை.எம்.சீ.ஏ மற்றும் சேவ் த சிலட்ரன் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.தலைவர் டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.சேவ் த சில்ட்ரன் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜூலியன் செல்லப்பாஇ தங்கவேல் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்களின் பொருளாதாரா அபிவிருத்திஇ குடும்பெண்களின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்தல்இ எதிர்கால பிள்ளைகளின் வளர்ச்சிஇ கிராமத்தின் அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் இம்மாநாட்டில் ஆராயப்பட்டன.மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க அலுவலகங்களில் கடமைபுரியும் உத்தியோதர்கள் மற்றும் கிராம மட்ட பெண்களுமாக 74 பெண்கள் இம்மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.