பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனையைச் சேர்ந்த அக்பர் ஜெமீல்; ஹாஜி ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்;.அடிப்படை கல்விக்கான ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் ராஜதந்திரமும் வெளிநாட்டு உறவுகளுக்குமான கலாநிதி பட்டப்படிப்பை இவர் பூர்த்தி செயதிருந்தார்.
கடந்த 2015-11-26ம்,27ம் திகதிகளில் சென் பீட்டஸ் பேக் ரஷ்யாவில் நடை பெற்ற 7வது சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு இவருக்கான கலாநிதி; பட்டத்தைப் பெற்றார்.பிரான்ஸ் உயர்கல்விக் கூடத்தின்;; அறிவியல் பேராசிரியர்;;; யுபழி முநமசையஉhயசயைn(ஜனாதிபதி பிரான்ஸ்)இவருக்கான கலாநிதி பட்டத்தை வழங்கினார்.
இந்த நிகழ்வில் உலக அறிவியல் காங்கிரஸ் தலைவர் பேராசிரியர் டாக்டர் மகாத்மா சாந்தி ஜயசேகர,இத்தாலி பாதுகாப்பு மற்றும் அமைதி சர்வதேச பாராளுமன்ற பேராசிரியர் செனட்டர் சஹ்ரா ஆயரசணைழை ரஷ்யா செயிண்ட் Pநவநசடிநசப பொது சேம்பர் பேராசிரியர் நிக்கோலி,பேராசிரியர் மார்சல் வலண்டையின் தூதர் யுனெஸ்கொ,பேராசிரியர் லக்கி கால்டிரன்,பேராசிரியர் மார்க் டி,பேராசிரியர் எட்வர்ட்,பேராசிரியர் யூஜின் ஆகியோர் முக்கிய அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேற்படி பல்கலைக்கழகத்தில் சர்வதே நாடுகளைச் சேர்ந்த 35 மாணவர்களில் இலங்கையில் இருந்து இவர் மட்டுமே மேற்படி கற்கைநெறிக்கான கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி,மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான மானி பட்டதாரியான இவர் றியாத் பல்கலைக்கழகத்தில் அறபு மற்றும் ஆங்கில டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார.;
மேலும் லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கணணி பொறிமுறை திட்ட டிப்யோமா பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.இவர் ஜோர்தான்,லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களில்; கவுன்சிலராகவும்,தொழில் திணைக்கள தலைவராகவும் கடமையாற்றிவிட்டு தற்போது இலங்கை வெளி நாட்டு வேலைவாய்புப் பணியகத்தில் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார்; என்பது குறிப்;பிடத்தக்தாகும்.
மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம்களான அல்ஹாஜ் இப்றாலெப்பை,ஹாஜியானி றைஹானத்தும்மா தம்பதியின் புதல்வாரன இவர் மருதமுனையில் கலாநிதி பட்டத்தைப் பெறும் பதினைந்தாவது நபராவார்.