உயர் நீதிமன்ற ஆணையாளராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வௌியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அலகரட்னமின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற ஆணையாளராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அய்ராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறானதொரு பதவியின் தேவை இல்லை என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
விஷேடமான சில சந்தர்ப்பங்ளில் மட்டும் இவ்வாறான பதவி வழங்கப்படலாம் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் அவ்வாறான பதவி ஒன்றில் நியமிப்பதற்கு தகுதியான வேறு சிரேஷ்ட நீதிபதிகள் இருப்பதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.