முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பாராளுமன்றக் கூட்டணியின் அடித்தளம் ஆட்டம் கண்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் முடிவடைந்த கையோடு மஹிந்த தரப்புக்கு சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரி விக்கப்பட்டதுடன் எதிர்க்கட்சித் தலைவர் பத விக்கும் உரிமை கோரப்பட்டது. ஆனால் இப்போது இருபதுக்கும் குறைவான எம். பிக்கள் குழுவே மஹிந்தவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் இது மேலும் குறைவடையலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்த மஹிந்த அணியினர் தங்களுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனாலும் கடைசியாக அவர்களுக்கு எஞ்சியிருப்பது 26 உறுப்பினர்கள் மட்டுமே என்பது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரியவந்தது.
தற்போது இதிலும் ஆறுபேர் அளவில் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ள உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கடைசியில் ராஜபக்ஷ குடும்பம் குணவர்தன குடும்பம் மற்றும் விமல் அணியைச் சேர்ந்த நாடாளுடன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ராஜபக்ஷ அணியில் நிலைத்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.